மாலை 5 மணிவரை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

Photo of author

By Vinoth

சென்னை: தென்மேற்கு மற்றும் அதில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கில்  மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வட கிழக்கு திசையில் நகரக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து  திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி கனமழை ஒரு சில இடங்களில் அதாவது  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று மதியம் 2 மணி வரை மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.