இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மேலும் இந்த போட்டியில் மீதம் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. நேற்று நடந்து முடிந்த 4 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் முக்கிய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்திய அணி ரசிகர்கள் பலரும் இவர்கள் என் இன்னும் ஓய்வை அறிவிக்காமல் உள்ளனர் என்று கூறி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவானது மங்கலாகி கொண்டே வருகிறது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் இந்த தொடர் முடிந்த பின் ஒரு மாதம் விடுமுறையில் இருக்க போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த செய்தி கேட்டு இந்திய ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றார். அதில் அவர்கள் கூறியதாவது இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாத பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட வேண்டும். இவர்கள் விளையாடிய நிலைக்கு எதற்கு ஒரு மாதம் ஓய்வு என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.