ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் போட்டியில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நான்கு போட்டிகளில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்த தொடரில் மீதம் ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வது கடினம் என்ற நிலையில் உள்ளது. இந்திய அணி சொதப்பி வருவதற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பார்க்கப்படுகிறார். இவர் இந்த தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸில் களமிறங்கி 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில் இவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் 4 வது போட்டியிலும் தோல்வியடைந்ததால் இந்திய அணி ரசிகர்கள் ரோஹித் ஓய்வு பெற வேண்டும் என்றால் பதிவு அதிகரித்து வந்த நிலையில் தற்போது இது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவர் தற்போது ஓய்வு குறித்து முடிவெடுக்க யோசித்து வருவதாகவும், இந்த தொடர் முடிந்த பின் அவர் ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் அவரின் கடைசி போட்டி இந்த ஆஸ்திரேலியா தொடர் என கூறப்படுகிறது.