cricket: இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் செய்த சைகையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா இரண்டு போட்டியிலும் வென்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் டிராவிஸ் ஹெட் மீது அவர் செய்த சைகை மூலம் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடிய இந்திய அணி பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் அவுட் ஆகினார். அதனை கொண்டாடும் விதமாக டிராவிஸ் ஹெட் அருவெருக்கத்தக்க சைகை ஒன்றை செய்தார். அவர் செய்த அந்த சைகை யானது மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அவர் மைதானத்தில் உள்ள குழந்தைகள் பெண்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் அவர் சைகை செய்துள்ளார். எனவே அவருக்கு இதுவரை இல்லாத ஒரு தண்டனையை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் அங்குள்ள 1.5 மில்லியன் மக்களையும் அவமதித்துள்ளார் எனவே அவருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.