ஆங்கில புத்தாண்டு 2025: ஜனவரி முதல் நாளில் இதை செய்தால் சிறப்பான ஆண்டாக அமையும்!!

0
82
English New Year 2025: If you do this on the first day of January, it will be a great year!!
English New Year 2025: If you do this on the first day of January, it will be a great year!!

ஆங்கில புத்தாண்டு 2025: ஜனவரி முதல் நாளில் இதை செய்தால் சிறப்பான ஆண்டாக அமையும்!!

ஜனவரி ஒன்றான இன்று முதல் 2025 ஆம் ஆண்டு தொடங்குகிறது.வருடத்தின் முதல் நாளில் சில செயல்பாடுகளில் ஈடுபட்டால் வருடம் முழுவதும் நமக்கு சிறப்பாக இருக்கும்.இந்த நாளில் அனைவரும் கோயிலுக்கு செல்வார்கள்.சிலர் வருடம் முழுவதும் எப்படி இருக்க வேண்டும் என்று கோல் செட் செய்வார்கள்.

சிலர் புதிய சேமிப்பு தொடங்குவார்கள்.இன்னும் சிலர் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்.அந்தவகையில் இந்த புத்தாண்டு நாளில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும்.எவற்றை செய்யக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்நாளில் அதிகாலை நேரத்தில் எழுந்து தலைக்கு நீராடிவிட்டு அருகில் இருக்கின்ற கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.விநாயகர்,லட்சுமி போன்ற தெய்வங்களை வணங்குவது இன்னும் சிறப்பை தரும்.2025 முழுவதும் கடவுள் அருள் கிடைக்க புத்தாண்டில் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

இந்நாளில் முடியாதவர்களுக்கு தங்களால் இயன்ற தானம் செய்யலாம்.படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த பொருட்களை வாங்கித் தரலாம்.இந்த புத்தாண்டில் வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து வழிபாடு செய்யலாம்.

மது,சிகரெட் போன்ற பழக்கங்களை இந்நாளில் தவிர்க்க வேண்டும்.பிறரிடம் சண்டை போடுதல்,தகாத வார்த்தைகளை தெரிவித்தல்,வாக்குவாதத்தில் ஈடுபடுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

இந்த புத்தாண்டில் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.கூர்மையான ஆயுதங்களை இந்நாளில் வீட்டிற்கு வாங்கி வரக் கூடாது.தங்கம்,வெள்ளி போன்ற பொருட்கள் வாங்க இந்நாள் உகந்த நாள்.ஆடம்பர செல்வுகளை இந்நாளில் தவிர்த்துக் கொள்ளுங்கள்.இந்நாளில் கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்து புண்ணியம் பெறுங்கள்.

Previous articleசளி இருமலுக்கு நொடியில் தீர்வு தரும் வெற்றிலை மாத்திரை!! ஒன்று சாப்பிட்டாலே பலன் கிடைப்பது நிச்சயம்!!
Next articleடிப்ரஷன் ஸ்ட்ரஸ் நீங்க.. பாலில் ஒரு இலையை கொதிக்க வைத்து பருகுங்கள்!! குடித்த சில நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!