தமிழக அரசின் முக்கிய முடிவு!! ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரி!!

0
132
Important decision of Tamilnadu government!! Special Officer for Panchayats!!
Important decision of Tamilnadu government!! Special Officer for Panchayats!!

முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தல் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஊரக உள்ளாட்சி பணியில் இருக்கக்கூடியவர்களுக்கு பதவி காலமானது வருகிற ஜனவரி 5ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலைகள் சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களினுடைய பதவிக்காலமானது வருகிற ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்ய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, ஊரக உள்ளாட்சி அலுவலகங்களில் உள்ள ஊழியர்களின் பணிக்காலம் நிறைவடைந்த உடன் சிறப்பு ஊரக உள்ளாட்சி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

எனினும், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது எப்பொழுது நடைபெறும் என்ற தகவல் தற்பொழுது வரையில் வெளிவரவில்லை. முதலமைச்சர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்து முடிந்த பின்னர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇவ்வாறு செய்தால்.. மாதவிடாய் காலத்தில் இனி வயிறு வலி வயிற்று பிடிப்பு பிரச்சனையை சந்திக்கவே மாட்டீங்க!!
Next articleஇந்த பானத்தை தொடர்ந்து 21 நாட்கள் குடிங்க!! 5 கிலோ எடை குறைஞ்சிடுவீங்க!!