என்னதான் நடக்குது இந்திய அணி ல?? மூன்று முக்கிய மாற்றங்கள்?? புதிய வீரர்கள் இவர்கள்தான்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ள 5வது போட்டியில் மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி தற்போது நாளை நடைபெற உள்ள 5 வது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கடைசி வாய்ப்பாக பார்க்கப்படுவது இந்த 5வது டெஸ்ட் போட்டிதான். இதில் இந்திய அணி மூன்று முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 வது டெஸ்ட் போட்டியானது சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் சற்று ஸ்பின் பவுலர்களுக்கு சாதகமாக இருந்தாலும் கடைசி இரண்டு நாட்கள் மழை கூறிய காரணத்தால் ஒரு ஸ்பின் பவுலர் மட்டும் கொண்டு களமிறங்க உள்ளது. அதனால் 4 வது போட்டியில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கில்  இடம்பெறுவர்.

அடுத்து ஆகாஷ் தீப் காயம் காரணமாக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா இடம்பெறுவர். மேலும் ரிஷப் பண்ட் ஒரு வேலை நீக்கப்படலாம் அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் இடம்  பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வகையான மாற்றங்கள் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.