ரோஹித் ஓய்வு பெற சரியான நேரம்.. தயவு செஞ்சி இத மட்டும் பண்ணிட்டு போங்க!! கோரிக்கை வாய்த்த இந்திய வீரர்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் ஆனால் இத மட்டும் பண்ணிட்டு போயிருங்க கோரிக்கை வாய்த்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரி.

இந்திய அணி  தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் 5 வது போட்டியில் நாளை விளையாடவுள்ளது. இரு அணிகளும் இந்த போட்டிக்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரு போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் தான் உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் மற்றும் விராட் இருவரும் பேட்டிங் செய்வதில் சொதப்பி வருகின்றனர். மேலும் இதுவரை 5 இன்னிங்ஸில் விளையாடி ரோஹித் சர்மா 31 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விராட் முதல் போட்டியில் மட்டுமே சதம் விளாசினார். அதன் பின் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார்.

இந்நிலையில் 4 வது போட்டியில் தோல்வி அடைந்த பிறகு ரோஹித் சர்மாவுக்கு என் இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறுகையில் அவர் ஓய்வு பெற இதுதான் சரியான நேரம் ஆனால் அவர் விளையாட வேண்டிய போட்டியில் அதிரடியாக விளையாடுங்கள். அவர் நேரம் நெருங்கிவிட்டது பொறுமையாக விளையாட முடியாது நான் அவர் அருகில் இருந்தால் அதிரடியாக விளையாட சொல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.