“இன்றளவு மக்கள் இடையே பெரிதளவு பயன்பாட்டில் உள்ளது ‘GPay, Phonepe, Paytm, Amazonpay’ ஆகியவை”. இதன் மூலம் வங்கி கணக்கில் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணின் வழியாக ஆன்லைன் பரிவர்த்தனை நடந்து வருகின்றன. ‘இதனால் நிறைய க்ரைமும் அதிகரித்து வருகின்றன’. இதனை கட்டுப்படுத்தும் வகையில், “நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அனைத்து UPI பயன்பாட்டுகளிலும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது”.
‘பயனர்கள் தனது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைலை மாற்றிய பின்னர், அதனை பயன்படுத்தாததால் பல UPI ஐடிகள் செயலற்ற நிலையில் உள்ளது’. இந்த செயலற்ற UPI ஐடிகளை முடக்க NPCI, ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. மேலும் ‘TRAI விதிமுறைகளின் படி, மூன்று மாதங்களுக்கு மேல் செயலற்று இருக்கும் எண்ணை பிற வாடிக்கையாளர்களுக்கு ஆப்ரேட்டர்கள் வழங்கலாம்’ என அறிவித்தது.
இதனால் அந்த எண்ணில் பதிவாகி இருந்த UPI ஐடி மோசடி செய்வதற்கு வழி உள்ளது. இதனை தடுக்க NPCI, “கடந்த ஒரு வருடமாக செயலிழந்துள்ள UPI ஐடிகளை ரத்து செய்ய UPI ஆப்கலுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும்,கடந்த ஒரு வருடமாக செயலற்ற UPI ஐடிகளை கணக்கெடுத்து தருமாறும் வலியுறுத்தியுள்ளது”.