தொண்டைக்கு இதம் தரும் திரிகடுகம்!! வாட்டி எடுக்கும் குளிர்காலத்திற்கு உகந்த பொருள்!!

0
73

தற்பொழுது பனி அதிகமாக பொழிவதால் சளி,இருமல்,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் இருந்தால் வறட்டு இருமல்,தொண்டை அரிப்பு போன்றவை ஏற்படும்.எனவே தொண்டைக்கு இதம் தரும் திரிகடுக பேஸ்ட் செய்து சாப்பிட்டு வரவும்.

சுக்கு,திப்பிலி,திப்பிலி ஆகியவற்றை உள்ளடக்கிய கலவை தான் திரிகடுகம்.இவை நாட்டு மருந்து கடையில் பாக்கெட்டுகளில் பொடியாக அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

*ஒரு சுக்கு துண்டு
*பத்து கருப்பு மிளகு
*இரண்டு அரிசி திப்பிலி
*கால் ஸ்பூன் கடலை பருப்பு
*கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
*ஒரு எலுமிச்சை அளவு புளி
*பத்து பல் வெள்ளைப் பூண்டு
*சிறிதளவு உப்பு
*கால் ஸ்பூன் கடுகு
*கால் ஸ்பூன் வெந்தயம்
*ஒரு கொத்து கறிவேப்பிலை
*கால் ஸ்பூன் பெருங்காயம்

செய்முறை விளக்கம்:

1.முதலில் சுக்கு,மிளகு மற்றும் திப்பிலியை வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.இந்த மூன்று பொருட்களின் கலவையை தான் திரிகடுகம் என்று அழைக்கின்றோம்.

2.அடுத்து புளியை ஊறவைத்து கரைசலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு பூண்டு பற்களை தோல் நீக்கம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

3.பிறகு அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ,கடலை பருப்பு,கடுகு,வெந்தயம் போட்டு பொரியவிட வேண்டும்.

4.பின்னர் கறிவேப்பிலையை போட்டு பொரிய விட வேண்டும்.அதன் பிறகு பூண்டு பற்களை போட்டு வதக்க வேண்டும்.

5.அதற்கு அடுத்து கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை அதில் ஊற்றி மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

6.இப்பொழுது தயாரித்து வைத்துள்ள திரிகடுக பொடியை அதில் கொட்டி கலந்துவிட வேண்டும்.

7.பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து வாணலியை இறக்க வேண்டும்.

8.இந்த திரிகடுக பேஸ்டை சூடான சாதத்தில் போட்டு உட்கொண்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Previous articleமூலத்தை வேரறுக்கும் மூலிகை!! ஒரே வாரத்தில் பைல்ஸ் பிரச்சனை டாட்டா காட்டிடலாம்!!
Next articleகுதிகால் வெடிப்பிற்கு அட்டகாசமான தீர்வு!! இந்த எண்ணெய் போதும்.. முதல் முயற்சியிலேயே பலன் கிடைக்கும்!!