“நடப்பாண்டில் ‘பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 4,100’ என மாநில முதலமைச்சர் பகவத்சிங்மான் அறிவித்துள்ளார்”. இதுவே, ‘இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை கொடுக்கும் மாநிலம்’ என்ற பெருமையை பெற்று, அம்மாநில விவசாயிகளை கௌரவித்துள்ளது.
ஆனால் தமிழ்நாட்டிலோ, ‘ஒரு டன் கரும்பின் விலை வெறும் ரூ.3150’. சென்ற ஆண்டு ஊக்கத்தொகை வழங்கியாவது, விவசாயி நலன் காத்தது. நடப்பாண்டில், ஊக்கத்தொகை பற்றி திமுக வாய் திறக்கவில்லை. “பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.38000 நஷ்டம் ஆகிறது. விவசாயி வயிற்றில் அடிப்பது தான் திராவிட மாடலா?” என ஆவேசமாக கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
‘கரும்பின் சர்க்கரை தன்மையை பொறுத்தே, அதன் மதிப்பு கணக்கிடப்படுகிறது’. “மத்திய அரசு 10.25% சர்க்கரைத் தன்மை கொண்ட கரும்பின் விலை டன்னுக்கு ரூ.3400 எனவும், 9.50% அல்லது அதற்கு கீழ் உள்ள சதவீதம் சர்க்கரைத் தன்மை கொண்ட கரும்பு டன்னுக்கு ரூ.3150 என அறிவித்துள்ளது”. ‘நம் தமிழ்நாட்டின் விளைவிக்கும் கரும்பின் சர்க்கரை தன்மையானது 9.50%’. நாம் கடல் சூழ்ந்த பகுதி என்பதால் கூட சக்கரைத்தன்மை குறைய வாய்ப்பு உள்ளது.
‘பஞ்சாபில் 10% சக்கரை தன்மை கொண்ட கரும்பு விளைவிக்கப்பட்டுள்ளது’. மேலும் “பஞ்சாப் அரசு ஊக்கத்தொகையாக ரூ.710 அறிவித்துள்ளது”. ஆனால், “தமிழ்நாட்டை ஆளும் திராவிட அரசு ஊக்கத்தொகை வழங்காதது ஏன்?” என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.