பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப்பணம் வழங்கப்படும்!!

0
531
Cash will be given instead of Pongal package!!
Cash will be given instead of Pongal package!!

புதுவை: பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ 500 பணம் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள் 3.1.2025 இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது அரசாங்கம் அதற்கு சந்தோஷமான அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களில் உள்ள நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்க கால அவகாசம் இல்லை.

எனவே கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்புக்கு பதிலாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.500 பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணமானது ஒவ்வொரு ரேஷன் கார்டுகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை கவர்னரிடம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

Previous articleபாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் திமுக அரசு ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு!!
Next articleமாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!