சவரனுக்கு ரூ.1200 உயர்ந்தது தங்கத்தின் விலை!! அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் ரூ.84,500 ரூபாய் உயரும்!!

0
294
The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!
The price of gold rose by Rs.1200 per Savaran!! 84,500 rupees will increase by the end of October!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக இன்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமம் ரூ. 70260 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆங்கில புத்தாண்டு தொடங்கி மூன்று நாட்கள் ஆகும் ஆகிய நிலையில் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது. இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இறுதிக்குள் 84 ஆயிரத்து 500 ரூபாய் வரை ஒரு சவரனின் விலை அதிகரிக்க கூடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இன்று வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்ச ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleமாணவி பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க கூடாது!! திருமாவளவன் பேட்டி!!
Next articleஇன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!