“அமெரிக்காவில் வருடந்தோறும் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் ‘நோரோ வைரஸ்’ தாக்கம் ஏற்படும்”. ‘கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாத கணக்கின் படி, 69 நபருக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தது’. அதன் தொடர்ச்சியாக, ‘டிசம்பர் மாத முதல் வாரத்தில், 91 நபர்களுக்கு இந்த தொற்று நோயானது பரவி உள்ளது என திடுக்கிடும் தகவலை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) கூறியுள்ளது’. இதனால் அமெரிக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுளது.
நோரோ வைரஸின் அறிகுறிகள்:
“கடுமையான வாந்தி, வயிற்றுபோக்கு, உடல் வலி, வயிற்று பிடிப்பு காய்ச்சல் மற்றும் சோர்வுத் தன்மை” ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த தொற்று பாதிக்கப்பட்ட ’12 மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் மேற்கூறப்பட்டஅறிகுறிகள் தோன்றும். இது உடலில் அதிக நீரிழப்பு ஏற்படுத்தி உடலை சோர்வடை செய்கிறது. சிலர் சிகிச்சை இன்றியும் தொற்றிலிருந்து விடுபடுகின்றனர். இவை பொதுவாக, ‘பள்ளிக்கூடங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவுகின்றன’. ‘சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், பிற நோய் தாக்கியவர்கள் மற்றும் பெரியவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்’. “அதிக நீரிழப்பு ஏற்பட்டால் மரணம் கூட நேரிடும் அபாயம் உள்ளது”. ‘இந்தத் தொற்று மாசுபட்ட உணவு,நீர் மற்றும் அசுத்தமான மேற்பரப்பு மூலம் வேகமாக பரவுகின்றன’.
‘இந்த நோயின் தாக்கம் சிலருக்கு 48 மணி நேரம் கழித்து தான் தெரியும் என்பதால் அது மக்களிடையே வேகமாக பரவுகிறது. மேலும் இது, ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்’. இந்த நோயை தடுக்க, ”நோய் தாக்கியவரை தனிமைப்படுத்துவது முக்கியம்”. மேலும், ‘கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவுதல், நீர் சம்பந்தப்பட்ட உணவுகளை நன்கு கொதிக்க விடுதல் நல்லது’. “உடலின் நீரிழப்பு அதிகமாக ஏற்பட்டால், கண்டிப்பான முறையில் மருத்துவரிடம் செல்ல வேண்டும்”.