சியாட்டிக்கா பிரச்சனைக்கு இது தான் பெஸ்ட் நாட்டு மருந்து!! தினம் இருவேளை எடுத்துக் கொண்டாலே போதும்!!

0
72

நீங்கள் எப்பொழுதாவது திடீரென்று கால்கள் இழுத்துக் கொள்ளும் பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்களா.திடீரென்று கால்கள் இழுத்துக் கொள்ளுதல்,கால் மரத்து போதல்,தொடை முதல் கால் வரை சுளீர்னு இழுத்துக் கொள்ளுதல் போன்றவை சியாடிக்கா பாதிப்பாகும்.

சியாட்டிக்கா அறிகுறிகள்:

1)கால்களில் கூச்ச உணர்வு
2)கால் உணர்வின்மை
3)கீழ் முதுகு வலி மற்றும் கூச்ச உணர்வது
4)நரம்பு அழுத்தம்

சியாட்டிக்காவை குணப்படுத்திக் கொள்ள நாட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம்.

தேவையான பொருட்கள்:

1)அமுக்கிரா கிழங்கு பொடி – 2 கிராம்
2)முத்து சிற்பி பற்பம் – 100 மில்லி கிராம்
3)குங்குலிய பற்பம் – 200 மில்லி கிராம்
4)தேன் – 1/4 ஸ்பூன்

செய்முறை:

இவை மூன்றும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.ஒரு மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் அமுக்கிரா கிழங்கு பொடி 2 கிராம்,முத்து சிற்பி பற்பம் 100 மில்லி கிராம் மற்றும் குங்குலிய பற்பம் 200 மில்லி கிராம் சேர்த்து ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

அடுத்து அதில் கால் ஸ்பூன் தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் சியாட்டிக்கா பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)சிவப்பு குங்குலிய தைலம் – 1/4 ஸ்பூன்
2)வாத நாராயணன் தைலம் – 1/4 ஸ்பூன்

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் இந்த இரண்டு தைலத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு சியாட்டிக்கா பாதிப்பு உள்ள இடத்தில் இதை தேய்க்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் சியாட்டிக்கா பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:

1)இரச கந்தி மெழுகு மாத்திரை – 1

செய்முறை:

இந்த மாத்திரையை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ளவும்.தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் ஒரு மாத்திரை சாப்பிட்டு வந்தால் சியாட்டிக்கா பாதிப்பில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.

Previous articleபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அழகு குறிப்பு!! இனி கெமிக்கல் பொருட்களுக்கு குட் பாய் தான்!!
Next article10 நோய்களை துரத்தி அடிக்கும் துத்திக்கீரை!! ஒரே நாளில் பலன் கிடைக்க.. உடனே பயன்படுத்துங்கள்!!