ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் ஆஸ்திரேலியா அணி இரு போட்டிகளில் என்று முன்னிலை வகிக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் எழுதிப் போட்டியின் வாய்ப்பு பிரகாசமாகி வருகிறது.
இந்திய அணிக்கு நான்காவது போட்டி மற்றும் ஐந்தாவது போட்டி மிக முக்கியமான போட்டிகளாக பார்க்கப்பட்டது ஆனால் இந்திய அணி நான்காவது போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதற்கு காரணமாக மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அவர்களின் ஃபார்ம். அது மட்டுமல்லாமல் இந்திய அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.
இன்று தொடங்கிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அதே சொதப்பல் ஆட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கனவு என்பது வெறும் கனவாக மட்டுமே போய்விடும். இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இந்திய அணி இழந்து விடும். ஐந்தாவது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 72.2 ஓவர்களில் 155 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 நூல்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஸ்காட் போலன்ட் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.