அயல் நாட்டிற்கு ஏற்றுமதியாகும் முருங்கை!! ஓராயிரம் நன்மைகள் கொண்ட முருங்கை பருப்பின் நன்மைகள் தெரியமா?

0
82

முருங்கையின் அருமை தெரிந்த முன்னோர்கள் அதை பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.ஆனால் காலப்போக்கில் அதன் மகத்துவத்தை நாம் மறந்துவிட்டதால் அதன் ஆரோக்கிய பலன்களை அனுபவிக்க தவறிவிட்டோம்.தற்பொழுது தான் முருங்கையின் மகத்துவத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்கள் இடத்தில் அதிகம் காணப்படுகிறது.

நம்மை விட அயல் நாட்டவர்கள் முருங்கையின் நன்மையை அறிந்து இந்தியாவில் இருந்து அதிகளவு இறக்குமதி செய்கின்றனர்.தற்பொழுது முருங்கை இலை,முருங்கை விதை,முருங்கை பட்டை,முருங்கை வேர்,முருங்கை பூ மற்றும் முருங்கை பிசின் என்று அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சாம்பார்,கூட்டு போனற்வற்றில் வாசனை மற்றும் சுவைக்காக சேர்க்கப்படும் முருங்கை காய் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை பெற்றிருக்கிறது.முருங்கை காயில் வைட்டமின் ஏ,பி,புரதம்,கால்சியம்,இரும்பு,மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

முருங்கை காயில் இருக்கின்ற பருப்பு சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஆண்களுக்கு முருங்கை பருப்பு ஒரு வரப் பிரசாதமாக திகழ்கிறது.இதில் துத்தநாகம்,ஆன்டி-ஆக்ஸிடண்ட்,வைட்டமின் சி உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.

முருங்கை பருப்பில் கொட்டி கிடக்கும் நன்மைகள்:

1)தினமும் பாலில் முருங்கை பருப்பு பொடி கலந்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

2)நெயில் வறுத்த முருங்கை பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

3)முருங்கை பருப்பை பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு பிரச்சனை குணமாகும்.

4)முருங்கை பருப்பை பொடித்து தண்ணீரில் கலந்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

5)இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை பருப்பை பொடித்து பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வரலாம்.

6)உடலுறவிற்கு பிறகு சோர்வை உணருபவர்கள் முருங்கை பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Previous article10 நோய்களை துரத்தி அடிக்கும் துத்திக்கீரை!! ஒரே நாளில் பலன் கிடைக்க.. உடனே பயன்படுத்துங்கள்!!
Next articleஇதய நோய் வாய்ப்பை குறைக்கும் காலை உணவு!! இந்த உணவுகளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!