இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் தான் ஸ்ரேயர்ஸ் ஐயர்.அவர் இங்கிலாந்து தொடருக்கு பின் அணியில் இருந்து காணாமல் போனார். அவர் இந்திய அணியில் டி 20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தார். பின் ஒழுங்கினம் காரணமாக மற்றும் அவர் பார்ம் இழந்த காரணத்தால் அவர் பிசிசிஐ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு ஐ பி எல் சீசனில் கொல்கத்தா அணியை தலைமை தாங்கி ஐ பி எல் கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் அடுத்த ஆண்டுக்கான ஐ பி எல் மெகா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி வாங்கவில்லை. அவரை பஞ்சாப் அணி ரூ 26.75 கோடிக்கு வாங்கியது. இதுவரை நடைபெற்ற ஐ பி எல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
இந்நிலையில் அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறார். இதில் கர்நாடக அணிக்கு எதிராக சதம் விளாசினார். அதன் பின் புதுச்சேரி அணிக்கு எதிராக மும்பை அணியில் விளையாடிய ஸ்ரேயர்ஸ் ஐயர் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மும்பை அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் களமிறங்கிய நிலையில் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 133 பந்துகளை எதிர்கொண்டு 137 ரன்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ரசிகர்கள் பலரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நிச்சயம் இடம் பெறுவார் என கூறி வருகின்றனர்.