Russia: ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரில் சமாதானம் பேசும் ரஷ்யா வெளியான தகவல் மற்றும் காரணம் இதுதான்.
ஏற்கனவே இரு போர்களை உலக நாடுகள் சந்தித்து வரும் நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் தீவிரமாகி வருகிறது. இரு நாடுகளுக்கிடையில் தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில் நடுவில் நான் சமாதானம் செய்கிறேன் என்று ரஷ்யா சூசகமாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள டி டி பி தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வந்தனர். அவர்களின் நோக்கம் ஆப்கானிஸ்தான் போல பாகிஸ்தானிலும் தற்போது நடைபெறும் ஆட்சியை தகர்த்தி தாலிபான் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.
இதனிடையே பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தியது இதில் அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய இடம் தீவிரவாதிகள் இருந்த இடம் என்றனர். ஆனால் ஆப்கானிஸ்தான் கூறுகையில் இங்கு அகதி மக்கள் அப்பாவி மக்கள் இருந்தனர். இதற்கு பதிலடி கொடுப்போம் என சண்டை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுகுறித்து கூறுகையில் ஏற்கனவே இரு நாடுகள் இடையே நடந்த போர் போதும் இதில் மூன்றாவது போர் தேவை இல்லை. இதில் பொதுமக்கள் கைகளிலும் துப்பாக்கி இருக்கின்றன. இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. எந்த பிரச்சனை என்றாலும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும்.
இரு தரப்பு நாடுகளுக்கும் பேச்சு வார்த்தைக்கான அழைப்பு கொடுக்கிறோம் என TASS செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. இதற்கு பின் நோட்டோ வை விட பலமாக இருக்க ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் படை நமது ராணுவத்தில் இருப்பது அவசியம் எனவே இதன் காரணமாக சமாதானம் பேச நினைக்கிறது ரஷ்யா.