மீண்டும் ஒரு இணைய மோசடி!! ரூ.13 லட்சத்தை இழந்த DRDO தொழில்நுட்ப அதிகாரி!!

0
151
Another internet scam!! DRDO technical officer who lost Rs.13 lakh!!
Another internet scam!! DRDO technical officer who lost Rs.13 lakh!!

சைபர் கிரைம் போலீசார் சைபர் குற்றங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காலர் டியூன் மூலம் சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சைபர் குற்றங்கள் குறைவது போல் இல்லை. ஒவ்வொரு முறையும் சைபர் குற்றவாளிகள் தங்களுடைய புதிய பரிணாமங்களை அடைந்து புது புது முயற்சிகளில் மோசடிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக பூனைகள் இருக்கக்கூடிய DRDO வில் பணிபுரிந்து வந்த மூத்த தொழில்நுட்ப அதிகாரி ஒருவரிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து இருக்கின்றனர்.

இது குறித்து அவர் எரவாடா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருப்பதாவது :-

நவம்பர் 3 வது வாரத்தில் தனக்கு பொதுத்துறை வங்கியில் இருந்து யார் என தெரியாத ஒரு நபரிடம் இருந்து வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் ஒன்று வந்ததாகவும், அதில் KYC விவரங்கள் அப்டேட் செய்வது தாமதமாகி கொண்டு செல்கிறது என்றும் உடனடியாக அப்டேட் செய்யவில்லை என்றால் தங்களுடைய கணக்கு மூடப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை உண்மையான நம்பிய அந்த அதிகாரி KYC அப்டேட் செய்வதற்காக அந்த லிங்கை கிளிக் செய்து தன்னுடைய ஸ்மார்ட் போனில் அந்த லிங்கில் இருந்த File ஐ பதிவிறக்கம் செய்திருக்கிறார். பதிவிறக்கம் செய்து முடித்தவுடன் சைபர் குற்றவாளிகளால் அதில் வடிவமைக்கப்பட்டிருந்தால் தீம் பொருள் பயன்பாடு தன்னுடைய பணியை துவங்கியிருக்கிறது.

திடீரென அதிகாரியின் தொலைபேசியில் பலமுறை OTP ஆனது வந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனை அந்நேரத்தில் கண்டுகொள்ளாத அந்த அதிகாரி அதன் பிறகு தன்னுடைய அக்கவுண்டில் இருக்கக்கூடிய பணமான ரூ.12.95 லட்சத்தை இழந்ததை உணர்ந்திருக்கிறார். அதன் பிறகு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் குறித்த மெசேஜ்களை பார்த்த பின்பு தான் தன்னுடைய அக்கவுண்டில் இருந்த பணம் முழுவதுமாக இழந்து விட்டோம் என்று பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

எரவாடா காவல் நிலைய காவலர்கள் எஃப் ஐ ஆர் பதிவு செய்து இது குறித்த விசாரணையை துவங்கி நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் இது போன்ற சைபர் குற்றவாளிகளிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க மீண்டும் மீண்டும் அவர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய வண்ணம் சைபர் க்ரைம் போலீசார் செயல்பட்டு வருகின்றனர்.

Previous articleரூ. 270 கோடி ரூபாய் ஏமாற்றியதாக பிரபு மற்றும் ராம்குமார் மீது வழக்கு!! சிவாஜி குடும்பத்தில் நிகழும் சொத்து பிரச்சனை!!
Next articleசேரன் சாருக்கும் எனக்கும் இடையிலான நம்பிக்கை ஒரு நடிகையால் உடைந்தது!! இயக்குனர் பாண்டிராஜ்!!