யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய இலங்கை மீனவர்களுக்கு சீனா அரசு தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தை துவங்கே நடத்தி வருகிறது. ஆனால் சில இலங்கை மீனவர்கள் சீன அரசினுடைய இந்த வீடுகளை வாங்க மறுக்கின்றனர். இது குறித்த முழு செய்தியை இந்த பதிவில் காண்போம்.
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் வதைக்கப்பட்டதை போன்று தற்பொழுதும் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் முள்ளிலும் காட்டிலும் குடிசை வசதி கூட இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தற்பொழுது இலங்கை மீனவர்களுக்கு சீனா அரசு கண்டெய்னர் மூலம் வீடு கட்டி தரும் திட்டத்தை துவங்கி நடத்தி வருகிறது.
கண்டெய்னர் வீடானது 15 ஆண்டுகளுக்கு தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது நிலையான வீடு இல்லையென்றாலும் துருப்பிடிக்காமலும், கடற்கரையோரத்தில் புயலை தாங்கும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த வீட்டில் சமையல் அறை உட்பட சாதாரண வீட்டில் இருப்பது போன்று தான் உட்புறத் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டில் ஒரு குடும்பம் வாழ்வதற்கான முழு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண வீட்டில் பயன்படுத்துவது போலவே இந்த வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி சாதாரண வீட்டை ஒப்பிடும் பொழுது அனைத்து வசதிகளும் இந்த கண்டெய்னர் வீடுகளிலும் உள்ள போதிலும் மக்கள் இதனை ஏற்க மறுக்கின்றனர்.
இதற்கு காரணம் கன்டெய்னர் வீட்டை பெற்றுக் கொண்டால் தங்களுக்கு நிரந்தரமான செங்கல் சிமெண்ட் வைத்து கட்டப்படும் வீடு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் இலங்கை மீனவர்கள் இதனை வாங்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீட்டிற்கான பாகங்கள் சீனாவில் இருந்து கொடூரப்பட்டு யாழ்ப்பாணத்தில் வீடுகளாக மாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.