சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆளும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்த அமைச்சருடன் நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து திமுக அரசுக்கு பாஜக உட்பட பல கட்சிகள் தங்களுடைய கண்டனங்களையும் தெரிவித்து வருகிறது. இவ்வாறு இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இருக்க, அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் குறித்த மதுரை ஆதீனம் தெரிவித்திருப்பதாவது :-
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களை, அவர்களுடைய பெற்றோர்கள் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியவர், எல்லாவற்றையும் அரசால் செய்ய முடியாது என்றும் கூறினார். மேலும், ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனியாக காவலர்களை நியமிக்க முடியாது என்றும் இது மட்டுமே காவலர்கள் உடைய வேலை இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளைகளை கட்டுப்பாடோடு வளர்க்க வேண்டும் என்றும் தான் கட்டுப்பாடோடு தான் வளர்ந்துள்ளேன் என்றும் பதிவு செய்திருக்கிறார் மதுரை ஆதீனம் அவர்கள்.