இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது இதில் 72.2 ஓவர்களில் 185 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தால் குறைவான ரன்களால் விக்கெட்டை இழந்தனர்.
இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் மொத்தம் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. எனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் அவர் கடைசி போட்டியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக 5 வது போட்டியில் பும்ரா தலைமை தாங்கினார். மேலும் இந்த போட்டியில் இரண்டாம் நாளான இன்று 10 ஓவர்கள் மட்டும் வீசி பாதியில் வெளியேறினார் பும்ரா. இந்நிலையில் அவர் மீண்டும் களத்திற்கு திரும்பாத நிலையில் அவருக்கு பதிலாக சர்ப்ராஸ் கான் களத்துக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக விராட் கோலி இந்திய அணியை வழி நடத்தி வருகிறார். இந்த தொடரில் மட்டும் இதுவரை 3 கேப்டன்கள் மாறிக்கொண்டே இருப்பதாக ரசிகர்கள் சமூக வளைதலங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.