காட்பாடி: காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்தின் வீட்டில் சோதனை நடத்த காலை ஒன்பது மணிக்கு அதிகாரிகள் வந்த நிலையில் கதிர் ஆனந்த் வெளிநாடு சென்று இருப்பதால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசி அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேர காத்திருப்பதற்குப் பின் மதியம் 2 மணி அளவில் வீட்டை திறந்து சோதனையை தொடங்கினர். இதனுடைய தனது உறுப்பினரை உடன் வைத்துக்கொண்டு சோதனை நடத்தும்படி கதிர் ஆனந் கேட்டுக் கொண்டதால் வேலூர் மாநகர துணை மேயர் சுனில் குமாரை வைத்துக்கொண்டு அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர்.
கதிர் ஆனந்தின் வீடு மட்டுமின்றி காட்பாடிகள் அடுத்த சித்தூர் சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டனர். மேலும் திமுக பிரமுகரும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் வீடுகளிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். ஏறத்தாழ ஏழு மணிநேர சோதனைக்கு பின்னர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து கைபையுடன் அதிகாரிகள் வெளியேறினர்.
அந்த பையில் சீனிவாசனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கல்லூரி லாக்கரில் கட்டு கட்டாக பணம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதை எடுத்துச் செல்ல அரசு வாகனம் கல்லூரி வந்தது. இதனடையை காட்பாடியில் உள்ள கதிர் ஆனந்த் வீட்டினுள் கடப்பாறை எடுத்துச் செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கார்பெண்டர் வரவழைக்கப்பட்டு வீட்டினுள் அழைத்துச் செல்லப்பட்டார். சிறிது நேரத்தில் மரப்பொருட்கள் உடைக்கும் சத்தம் கேட்டது இதனடையே வீட்டை விட்டு வெளியே வந்த கார்பெண்டர் வீட்டில் இரண்டு கதவுகளின் பூட்டை உடைத்து திறந்ததாக தெரிவித்தார். திமுக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.