சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

0
92
Southern Railway action notification about special trains!!
Southern Railway action notification about special trains!!

சென்னை: பலரும் எதிர்பார்த்த நிலையில் சிறப்பு ரயில்கள் தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோயில், இராமநாதபுரம் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது மறுநாள் நண்பகல் 12:30 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு ஜனவரி 11,13,18 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு இராமநாதபுரம் சென்றடைகிறது.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 13,20,27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரயில் ஆனது தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

இதே போல் சென்னை தாம்பரம் திருச்சி இடையே இன்று மற்றும் நாளை அதோடு 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளிலும் ஜென் சதாப்தி என பெயரிடப்பட்ட சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 12:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

மறுபக்கத்தில் தாம்பரத்தில் இருந்து மதியம் 3:35 புறப்படும் சிறப்பு ரயில் திருச்சிக்கு நள்ளிரவு 11:35 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் ஜனவரி 12,19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அந்த ரயில் இரவு  11:30 மணிக்கு புறப்படும் மறுநாள் மதியம் ஒரு மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது.

Previous articleசிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம்!! பயத்தில் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன்!!
Next articleஎண்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. நான் ஓய்வு பெற போவதில்லை!! அதற்கான தொடர் இதுதான்??