அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை!! குஷியில் நகை பிரியர்கள்!!

0
216
The price of gold is drastically reduced!! Jewelry lovers in Khushi!!
The price of gold is drastically reduced!! Jewelry lovers in Khushi!!

சென்னை: தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றம் இறக்கம் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது ஏற்றம் ஏற்பட்டது.  புது வருடம் அன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ 57 ஆயிரத்து 200 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்றுமுன்தினம்  ரூ.240 உயர்ந்து ஒரு சவரனின் விலை 57, 440க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று தங்கத்தின் விலை கிடு கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

ஒரு சவரனுக்கு 640 உயர்ந்து ஒரு சவரன் 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமம் ரூ. 70260 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஆங்கில புத்தாண்டு தொடங்கி மூன்று நாட்கள் ஆகும் ஆகிய நிலையில் சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது. ஆனால் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.7215 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் தங்கம் ரூ.57720 விற்பனை செய்யபடுகிறது.  இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இறுதிக்குள் 90 ஆயிரம்  ரூபாய் வரை ஒரு சவரனின் விலை அதிகரிக்க கூடும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய்குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 99  ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 99 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஎண்டு கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க.. நான் ஓய்வு பெற போவதில்லை!! அதற்கான தொடர் இதுதான்??
Next articleஉணவு சார்ந்த தொழில்களுக்கு 90% கடன் வசதி.. 10 லட்சம் மானியம்!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!