ஜாக்கி சான் ஒரு பேட்டியில் இந்தியர்களைப் பற்றி புகழாரம் செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் களின் ஆக்சன் மன்னனான ஜாக்கி ஷான் கூறியதாவது,
இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து இந்தியன் பேன்ஸும் என் மனதை தொட்டு உள்ளார்கள், என்று தான் கூற வேண்டும். என்னால் அவர்களை மறக்கவே முடியாது. இந்தியன் ஃபிலிம் சில் உள்ள என்னோட கோ-ஒர்க்கர்ஸ்க்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். AI டெக்னாலஜி டெவலப்மெண்ட் நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. ஃபிலிம் இண்டஸ்ட்ரிலையும் அதனுடைய பங்கு பெரியது. அன்றைய காலத்தில் செய்ய முடியாததை இந்த டெக்னாலஜி பயன்படுத்தி கிரியேட்டர்ஸ் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல முடியும்.
ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி டைரக்டர் ஸ்ரீமன்ஸ், உங்களால் எப்படி இந்த ஆக்சன் படங்களில் நடிக்க முடிகிறது என்றார். அதற்கு நான், அது மிக சிம்பிள். ரோல், ஆக்சன், ஜம்ப், ஹாஸ்பிடல் என்றேன். இதன் மூலம் அவர் சினி பீல்டில் பட்ட கஷ்டங்களை நம்மால் உணர முடிகிறது. ஒரு டைரக்டர் ஓட பரஸ்பர நம்பிக்கை கொண்டு வருவது மிக கடினம். எனக்கும், ஸ்ரீமன்ஸுக்கும் அந்த வகையில் எங்கள் உறவு வலுவானது. ‘ஸ்மித்,கும்பூ யோகா’ ஆகிய படங்கள் இந்தியாவில் தான் பெரும்பாலும் ஷுட் செய்தோம். கூட ஒர்க் பண்ற ஆக்டர்ஸ் எனக்கு விதவிதமான இந்தியன் ஃபுட்ஸ் எல்லாம் கொண்டு வருவாங்க. அதே மாதிரி இந்திய பாரம்பரிய உடைகள் நிறையவே எனக்கு கிஃப்டா கொடுத்தாங்க.
இந்தியாவோட ஃபேமஸ் லேண்ட்மார்க் எல்லாத்தையும் ஷூட் பண்ணி இருக்கோம். இந்திய கட்டிடக்கலை பார்த்து நான் வியந்துள்ளேன். அந்த காலத்தில் இந்த மாதிரி கட்டிடங்கள் எவ்வாறு கட்டினார்கள் என்பதை நினைத்தால் புல்லரிக்குது. பாலிவுட் ஆக்டர்ஸ் எல்லாரும் திறமை மிக்கவர்களாக இருக்காங்க. ஆக்டிங் மட்டும் இல்ல சிங்கிங், டான்சிங் எல்லாத்துலயுமே மிகச் சிறப்பாக பணியாற்றுறாங்கள். எல்லாருமே சப்போர்ட்டிவா இருந்தாங்க. அதைப்போல் ப்ரொபஷனல் ஆகவும் இருந்தாங்க.
எதிர்காலத்துல நல்ல திறமை வாய்ந்த இந்தியன் டைரக்டர்ஸ் அண்ட் ஆக்டர் கூட சேர்ந்து நிச்சயமாக பணிபுரிவேன். மறுபிறவி என உண்மையாக இருந்தால் சூப்பர் மேன் ஆக பிறப்பேன். மக்கள் இடையே அமைதியையும், சந்தோஷத்தையும் கொண்டு போய் சேர்ப்பேன். என்னோட பயோகிராபியை சைனாவில் பத்து வெவ்வேறு லாங்குவேஜில் பப்ளீஸ் செய்துள்ளேன். இந்தியாவில் என்னுடைய கதை வேண்டுமென்றால் என் டீமை காண்டாக்ட் செய்யலாம். இதன் மூலம் என் வாழ்க்கை வரலாறு பற்றி இந்தியர்கள் அனைவரும் அறியலாம். என்னுடைய லெஜென்ட்ங்கிற மூவி இந்தியாவில் ரிலீஸ் ஆகப்போகிறது. என்னுடைய ரசிகர்கள் அதை தியேட்டருக்கு போய் பாருங்க. உங்களுடைய ஃபீட்பேக் மற்றும் பாராட்டுகளை கண்டிப்பாக எனக்கு தெரிவியுங்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.