இந்திய அணி நேற்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.இதில் இரண்டாவது நாளான இன்று பும்ரா காயம் காரணமாக வெளியேறினார். அதன் பின் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் மீது பொறுப்பு அதிகமானது. ஆனால் அந்த பொறுப்புடன் இருவரும் பந்து வீசினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடர் தொடங்கும் முன் இந்திய அணி விளையாடிய நியூசிலாந்து தொடரில் படுதோல்வியை சந்தித்தால் இந்திய அணி இந்த தொடரில் மொத்தம் உள்ள 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. ஆனால் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் 5 வது போட்டியில் இந்திய அணியில் இணைந்தார் பிரசித் கிருஷ்ணா அவர் மொத்தமாக 15 ஓவர்கள் வீசி 3 ஓவர்கள் மெய்டன் செய்தார். மேலும் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து ஸ்டீவ் ஸ்மித்,பியூ வெப்ஸ்டர்,அலக்ஸ் கேரி என 3 முக்கிய விக்கெட்டுகளை தட்டி தூக்கினார். இந்நிலையில் இவரின் நிலை தெரிந்து ஏன் இதுவரை இவரை அணியில் விளையாட வாய்ப்பளிக்கவில்லை என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.