உலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!

0
150

நம் அன்றாட வாழ்வில் பாதாம்,முந்திரி,வால்நட் என்று பலவகை உலர் விதைகளை உட்கொள்கின்றோம்.உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகள் சிலருக்கு கேடு விளைவிக்கும் பொருளாக மாறுகிறது.யார் யாரெல்லாம் உலர் விதைகளை உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து இங்கு விளக்கப்பட்டிருக்கிறது.

**செரிமானப் பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் உலர் விதைகளை சாப்பிடக் கூடாது.அஜீரணக் கோளாறு இருப்பவர்கள் உலர் விதைகளை உட்கொண்டால் அவை செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.இதனால் வயறு உப்பசம்,வயிறு வலி,குடல் வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும்.

பாதாம் தோலில் இருக்கின்ற டானிக் எனும் வேதிப் பொருள் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.ஆகவே செரிமானப் பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் உலர் விதைகள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

**ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் உலர் விதைகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிலருக்கு நட்ஸ் அலர்ஜி பாதிப்பு இருக்கும்.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உலர் விதைகளை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல்,அரிப்பு,சரும வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

**உலர் விதைகளில் உள்ள கொழுப்பு அமிலம் சில நேரங்களில் நெஞ்செரிச்சல் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.இவர்கள் தொடர்ந்து உலர் விதைகளை சாப்பிட்டு வந்தால் புளி ஏப்பப் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.எனவே இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் உலர் விதைகள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

**வயிற்றுப்புண் மற்றும் பெருங்குடல் சார்ந்த பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் உலர் விதைகளை தவிர்க்க வேண்டும்.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உலர் விதைகளை உட்கொண்டால் அவை செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.உலர் விதைகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதை உட்கொள்ளும் பொழுது கடுமையான அலர்ஜி பிரச்சனை ஏற்படுகிறது.

Previous articleமூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!
Next article5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய புரோட்டீன் உணவுகள் லிஸ்ட் இதோ!!