மூக்கில் சளி ஒழுகுதல் பிரச்சனைக்கு பெஸ்டான தீர்வு பூண்டு கசாயம்!! நொடியில் சளி வழித்துக் கொண்டு வந்துவிடும்!!

0
138

நீண்ட காலமாக சளிப் பிரச்சனையை சந்தித்து வருகிறீரவர்களா இதில் இருந்து எளிதில் மீள பூண்டு கசாயம் செய்து பருகுங்கள்.நெஞ்சுப் பகுதியில் கோர்த்திருக்கும் சளியை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.இதனுடன் ஓமவல்லி,இலவங்கம்,சீரகம்,இஞ்சி உள்ளிட்ட பொருட்களை சேர்த்துக் கொண்டால் சளித் தொல்லைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

**ஓமவல்லி இலை – மூன்று
**வெள்ளை பூண்டு – நான்கு பற்கள்
**இலவங்கம் – இரண்டு
**சீரகம் – கால் தேக்கரண்டி
**இஞ்சி துண்டு – ஒன்று
**மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு

செய்முறை விளக்கம்:-

1)ஓமவல்லி இலையை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

2)பிறகு வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

3)அதன் பிறகு இரண்டு கிராம்பு மற்றும் சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.

4)அதன் பிறகு இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

5)பிறகு பாத்திரம் ஒன்றில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள ஓமவல்லி இலை,இடித்த வெள்ளைப்பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்ல்.

6)அதன் பிறகு இலவங்கம் மற்றும் சீரகப் பொடியை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு இஞ்சி சாறு மற்றும் மஞ்சள் தூளை அதில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

7)பிறகு இதை நன்கு ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் சளி ஒழுகுதல் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபட்டுவிடலாம்.இந்த கசாயத்தை குறைந்தது இரு தினங்களாவது பருக வேண்டும்.

Previous articleவீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுக்கு.. எந்த பூக்களை சூட்டுவது நல்லது தெரியுமா?
Next articleஉலர் விதை ஹெல்த்துக்கு நல்லது!! ஆனா இவர்களெல்லாம் அதை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது!!