புகைப்பழத்தை கைவிட முடியலையா? இருக்கவே இருக்கு வீட்டு வைத்தியம்!! ஒரே வாரத்தில் நீங்களே நல்ல மாற்றத்தை உணர்வீர்!!

0
131

இன்றைய காலத்தில் பெரியவர்கள்,இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.இதில் இருந்து மீண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றி வாருங்கள்.

1)சூரியகாந்தி விதைப் பொடி – 5 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

*முதலில் வாணலி ஒன்றில் 10 சூரிய காந்தி விதையை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

*சூரிய காந்தி விதை ஆறியப் பிறகு மிக்சர் ஜார் அல்லது உரலில் போட்டு இடித்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.

*பிறகு பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் கழித்து பொடித்து வைத்திருக்கும் சூரிய காந்தி விதைப்பொடியை கொட்டி குறைவான தீயில் கால் கிளாஸ் நீராக சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

*இந்த சூரிய காந்தி விதை பானத்தை தினமும் மூன்றுவேளை செய்து பருகி வந்தால் புகைப்பழக்கத்தில் இருந்து எளிதில் மீண்டுவிடலாம்.புகைப்பழக்கத்தை கைவிட முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.அப்படி இருக்கையில் இந்த சூரியகாந்தி விதை பானம் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அருமருந்தாக திகழ்கிறது.

*அதேபோல் சூரிய காந்தி விதையை வறுத்து பொடித்து பாலில் கலந்தும் குடிக்கலாம்.இல்லையேல் சூரிய காந்தி விதையை வறுத்து அரைத்து பொடியாகவும் சாப்பிடலாம்.

மற்றொரு தீர்வு:

1)புதினா இலை – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

*பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

*பிறகு அதில் 10 புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டுவிடலாம்.

*தினமும் இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வந்தாலும் புகைப்பழத்தில் இருந்து மீள வழிபிறக்கும்.

Previous articleதலைமுடி வலுவிழந்து கொட்டுகிறதா? இந்த உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! வெட்ட வெட்ட முடி வளரும்!!
Next articleஇது தெரியுமா? வீட்டை சுத்தப்படுத்தும் துடைப்பம்.. இந்த நாளில் மட்டுமே வாங்க வேண்டும்!!