வருகின்ற ஜனவரி 13 ஆருத்ரா தரிசன உற்சவம் நிகழ இருக்கிறது. இந்நிகழ்ச்சியின் கொடியேற்றமானது இன்று( ஜனவரி 4 ) அதிகாலை கொடியை ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பொதுவாக சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியானது கோலகாலமாக நடைபெறும். நடராஜமூர்த்தி மற்றும் சிவகாமசுந்தரி அமர்ந்திருக்கும் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகளின் சாட்சியாக பிரதிநிதி ஹஷ்தராஜரை முன்னிறுத்தி மரியாதை செய்து, உற்சவ ஆச்சாரியார் சிவராஜ தீச்சிதர் ரிஷப கொடியை ஏற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக டி எஸ் பி அகஸ்டின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கடல் அலையா? மனித தலையா? என்று கேட்கும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் கோவிலில் நெம்பி வளைந்தது. இதனை தொடர்ந்து பத்து நாட்கள் வீதி உலா உற்சவம் நடைபெறும். ஆருத்ரா தரிசனத்தின் முதல் நாளில்( ஜனவரி 12) தேர் திருவிழா நடைபெறும். அன்று இரவு ஆயிரம் கால் மண்டபத்தில் ஏககால லட்ச அர்ச்சனை நடைபெறும்.
ஆருத்ரா தரிசனம் அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அம்மையப்பனுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். காலை 10 மணி அளவில் சித்சபையில் ரகசிய பூஜையும், அதை பின் பஞ்சமூர்த்தி வீதி உலாவும் வந்த பின்னர் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேச நிகழ்வும் நடைபெறும். இதற்கு அடுத்த நாள் பஞ்சமூர்த்தி முத்து பல்லாக்கு வீதி உலாவும், அதற்கு அடுத்த நாள் சிறப்பாக தெப்ப உற்சவமும் நடைபெறும். உற்சவ ஏற்பாடுகளை கோவிலின் பொது தீட்சிதர்கள் கமிட்டி பொறுப்பு ஏற்றுள்ளது.