இந்திய உணவில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஏலக்காயில் பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் என்று இரண்டு வகை இருக்கின்றது.இதில் கருப்பு ஏலக்காய் அதிக சத்துக்கள் கொண்ட மூலிகையாகும்.
கருப்பு ஏலத்தில் உள்ள சத்துக்கள்:
*கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *துத்தநாகம் *சோடியம் *பாஸ்பரஸ் *பொட்டாசியம் *மாங்கனீஸ் *வைட்டமின்கள்
கருப்பு ஏலக்காய் நெஞ்செரிச்சல்,தொண்டை பிரச்சனை,ஆஸ்துமா,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள கருப்பு ஏலக்காய் தேநீர் செய்து பருகி வரலாம்.
தேவையான பொருட்கள்:
1)கருப்பு ஏலக்காய் – ஒன்று
2)தேயிலை தூள் – அரை தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு துண்டு
4)பனங்கற்கண்டு – சிறிதளவு
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
ஏலம் நீர் தயாரிக்கும் முறை:
*முதலில் கருப்பு ஏலக்காயை உரலில் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும்.கொரகொரப்பான பதத்திற்கு வரும் வரை கொதிக்க தட்டி எடுத்து வேண்டும்.
*பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு இருந்தால் போதுமானது.
*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
*இதமான சூட்டிற்கு தண்ணீர் வந்ததும் இடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் இஞ்சியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
*அடுத்து அரை தேக்கரண்டி அளவிற்கு தேயிலை தூளை அதில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*அதற்கு அடுத்து இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகினால் உடலுக்கு தேவையான கதகதப்பு கிடைக்கும்.
- *கருப்பு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும்.உடலில் உள்ள கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் கரு ஏலக்காயை பொடியை வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.