தமிழகத்தில் பொங்கலுக்கு 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளுக்கு 14 15 16 ஆகிய தேதிகளில் முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் கரிநாள் போன்றவை கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும். அதனை தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி வேலை நாள் ஆகவும் அடுத்து வரக்கூடிய 18 மற்றும் 19 ஆகிய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்கள் ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 17ஆம் தேதியும் விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொங்கல் திருநாளை ஒட்டி 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அதாவது 6 நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழக அரசு 17 ஆம் தேதியும் விடுமுறை நாளாக அறிவித்ததை ஒட்டி சொந்த ஊருக்கு செல்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பொதுவாக 3 நாட்கள் மட்டுமே விடுமுறை கொடுக்கப்பட்டு கொண்டாடப்படும் பொங்கல் திருநாளானது இந்த ஆண்டு 6 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.