சம்பந்தப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்கு சர்வே எண் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அரசின் வருவாய் பதிவேட்டில் இருக்கக்கூடிய அனைத்து நிலத்திற்கும் தனித்தனியாக சர்வே எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சர்வே எண் மூலமாக நிலத்தினுடைய உரிமையாளர் யார் ?, நிலம் எவ்வளவு பரபளவில் இருக்கிறது போன்ற நிலத்தினுடைய முக்கியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தற்பொழுது இவற்றை எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் அரசு வில்லேஜ் மாஸ்டர் என்ற புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
தமிழக அரசின் வில்லேஜ் மாஸ்டர் இணையதளம் :-
நில மோசடி மற்றும் நிலா கையகப்படுத்தல் போன்றவற்றை தடுக்கும் விதமாக மற்றும் கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தமிழக அரசு உருவாக்கிய புதிய இணையதள வசதி தான் இந்த வில்லேஜ் மாஸ்டர் ஆகும்.
தமிழ் நிலம் திட்டத்தின் கீழ் வில்லேஜ் மாஸ்டர் என்ற இணையதளத்தை ( https://tngis.tn.gov.in/apps/village- dashboard/படம் ) தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன் நிலத்தினுடைய உரிமையாளர் யார், நிலத்தினுடைய பரப்பளவு என்ன மற்றும் நிலத்தினுடைய வரைபடம் என அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வில்லேஜ் மாஸ்டர் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சர்வே எண்ணை https://eservices.tn. gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிடுவதன் மூலம் நிலத்தினுடைய முழு தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வன பகுதி, தீவுகள், மலைகள் போன்றவற்றின் இடங்கள் குறித்த விவரங்களையும் இதில் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி சர்வே எண்ணில் நடைபெறும் மோசடிகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.