சென்னை எழும்பூரில் நடைபெற்ற சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்துள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் உடைய கருப்பு நிற துப்பட்டாக்களை விழா கருத்தரங்கத்திற்கு வெளியே கழட்டி வைத்து விட்டு வரும்படி கூறப்பட்டிருக்கிறது.
ஜனவரி 5 ஆன இன்று சிந்து வழி பண்பாட்டு கண்டுபிடிப்புகளின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இடமாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்த இந்த நிகழ்ச்சியானது 3 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் மாணவிகளின் உடைய கரும்பு துப்பட்டாக்களை பயன்படுத்தி விழாவில் ஏதேனும் பிரச்சனை நிகழ்ந்து விடுமோ என பயந்து அவர்களுடைய துப்பட்டாக்களை கருத்தரங்கத்திற்கு வெளியே கழட்டி வைக்கும் படி கூறியுள்ளதாகவும், திமுக அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மட்டுமே பல கட்சியை சார்ந்தவர்களும் இதற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ” இது எவ்வகை எதேச்சதிகாரம் ? ” என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறார் அண்ணாமலை அவர்கள்.