cricket: இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் மீது கடுமையான விமர்சனங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற நிலையில் தொடரை இழந்துள்ளது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்துள்ளது. 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றது ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பை இழந்தது.
இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து பலரும் பலவகையான கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் ரோஹித் விராட் மற்றும் கம்பீர் தான் காரணம் என்றும் பலவகையான கருத்துகள் எழுந்து வந்த நிலையில் கில் மீதான விமர்சனம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில் குறித்து பத்ரிநாத் கூறிய கருத்து தற்போது பெருபொருளாகியுள்ளது.
சுப்மன் கில் இதுவரை வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட்டில் 3 ஆண்டுகளில் ஒரு முறை கூட 40 ரன்களை எட்டவில்லை. இதுவரை இந்த தொடரில் 3 வது வரிசையில் களமிறங்கி 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஒரு நேரத்தில் இவரை அனைத்து பார்மட்டுகளில் கேப்டனாக அறிவிக்க திட்டமிட்டு வந்தது நிர்வாகம். மேலும் இந்திய அணியில் ஒரு தமிழ்நாடு வீரர் இதுபோன்று விளையாடாமல் இருந்திருந்தால் அவர் இந்நேரம் நீக்கப்பட்டு காணாமல் போயிருப்பார். ஆனால் இவர் இன்னும் அணியில் நீடிக்கிறார். இவருக்கு பில்டப் கொடுக்கும் அளவிற்கு இவர் ஆட்டத்தில் வெளிப்பாடு இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார் பத்ரிநாத்.