இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வென்றது. மேலும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகளில் வென்று தொடரை வென்றது இதுகுறித்து கவாஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணி இடையிலான கடைசி போட்டியான 5 வது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 185 குறைவான ரன்களை மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 181 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானி 4 விக்கெட் இழப்பிற்கு எளிதாக அடைந்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
முதல் இன்னிங்ஸில் 10 ஓவர்கள் மட்டும் வீசி வெளியேறினர் பும்ரா அவருக்கு முதுகு தசை பிடிப்பு காரணமாக இரண்டாவது இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை. மேலும் இதுகுறித்து கவாஜா கூறுகையில் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான் அவர் பந்து வீசாதது எங்களுக்கு பெரிய பிளஸ் அவர் வீசி இருந்தால் எங்களுக்கு பெரிய சிக்கலாக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார்.