இந்திய அணியில் தோனி கேப்டன்சியில் 2016 ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அறிமுகமானவர் ரிஷி தவான். இவர் வலது கை பந்துவீச்சாளர் மற்றும் வலது கை பேட்ஸ்மேன் இவர் இமாச்சல் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அப்போது இந்திய அணி ஆல் ரவுண்டரை தேடி கொண்டிருந்தது. அப்போது அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவர் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் இதில் இவர் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரு டி 20 போட்டியில் மட்டும் விளையாடி அந்த போட்டியில் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார் மொத்தம் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
ஐ பி எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணியில் விளையாடியுள்ளார். ஆனால் இவருக்கு பஞ்சாப் அணியில் அதிக போட்டியில் விளையாட வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இவர் ஐ பி எல் போட்டிகளில் மொத்த போட்டிகளில் 25 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். தற்போது உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவு செய்து இந்த முடிவை எடுத்துள்ளதால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.