உலர் விதைகளின் ராஜாவாக திகழும் பாதாம் பருப்பு பல மருத்துவ பயன்களை கொண்டிருக்கிறது.இயற்கையாக விளைகின்ற இந்த பருப்பில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பாதாம் பருப்பில் தாதுக்கள்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
கால்சியம் சத்து குறைபாட்டால் அவதியடைந்து வருபவர்கள் பாதாம் பருப்பை பாலில் சேர்த்து உட்கொண்டு வரலாம்.பாதாமில் நிறைந்திருக்கும் கால்சியம் உடலில் கால்சியம் சத்துக்குறைபாட்டை போக்க உதவுகிறது.
பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*புரதம் *மெக்னீசியம் *கார்பஸ் *நல்ல கொழுப்பு *நார்ச்சத்து *வைட்டமின் ஈ *கலோரி *கால்சியம்
பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
*கால்சியம் *புரதம் *வைட்டமின் பி *பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.
தேவைப்படும் பொருட்கள்:
1)பாதாம் கொட்டை – 10
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)ஏலக்காய் தூள் – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:
கால்சியம் சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் பாதாம் கொட்டை முதல் இடம் வகிக்கிறது.பாதாம் கொட்டையை தண்ணீரில் ஊறவைத்து தோலை நீக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு ஏலக்காயை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பாதாம் பேஸ்டை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.
அடுத்து வாசனைக்காக பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூள் சேர்த்து மிதமான தீயில் பால் காய்ச்ச வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்து பருகலாம்.இல்லையேல் பனங்கற்கண்டு அல்லது வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.இந்த பாலை தொடர்ந்து பருகி வந்தால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவது கட்டுப்படும்.