இந்திய சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி மொத்த போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. ஆனால் இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் வென்று தொடரை வென்றது.
இந்த போட்டியில் மட்டுமல்லாமல் இந்த தொடருக்கு முன் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. இதற்கு முக்கிய காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கோலி இருவரின் மோசமான ஆட்டம் தான் என கடுமையான விமர்சனங்கள் அவர்கள் மீது முன் வைக்கப்பட்டது. ஆனால் இந்த தொடரிலும் இருவரும் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் அவர்கள் இருவரும் இப்போதைக்கு அணியை விட்டு ஓய்வு அறிவிக்க போவதில்லை என கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் அவர்கள் அணியை விட்டு ரெட்ட்டேன்ஷன் கொடுக்கவில்லை என்றாலும் நாங்களே அனுப்பி விடுவோம் என அதிரடியாக பதிலளித்துள்ளார். இந்த பதிலால் அவர்களுக்கு அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.