தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகளை குணமாக்க வீட்டில் இருக்கின்ற பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
தலை அரிப்பு
வேப்ப இலையை அரைத்து பேஸ்டாக்கி தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் தலை அரிப்பு குணமாகும்.
கண் எரிச்சல்
விளக்கெண்ணெயில் வெந்தயம் சேர்த்து காய்ச்சி ஆறவைத்து கண்களை சுற்றி அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கிவிடும்.
சளித் தொல்லை
தூதுவளை,துளசி இலையை அரைத்து ஒரு கிளாஸ் சூடான நீரில் போட்டு கலந்து பருகி வந்தால் சளித் தொல்லை அகலும்.
தொண்டை கரகரப்பு
தேனை சூடான தண்ணீர் கலந்து பருகி வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கிவிடும்.தூதுவளை இலையை பொடித்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கிவிடும்.
வயிறு உப்பசம்
பூண்டு பற்களை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் வயிறு உப்பசம் சரியாக வேண்டும்.இஞ்சி சாறை சூடான தண்ணீரில் பருகி வந்தால் வயிறு உப்பசம் சரியாகும்.
உடல் பருமன்
ஒரு கிளாஸ் சுடுநீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகி வந்தால் உடல் எடை குறையும்.
நகசுத்தி
பூண்டு பற்களை இடித்து ஒரு எலுமிச்சை பழத்தில் துளையிட்டு நுழைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் மஞ்சள் தூளை போட்டு நகசுத்தி உள்ள நகத்தில் நுழைக்க வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் நகசுத்தி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
குடல் அலர்ஜி
பப்பாளி பழத்தை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் குடல் அலர்ஜி நீங்கிவிடும்.
மூட்டு வலி
முடக்கத்தான் இலையை அரைத்து மூட்டு பகுதியில் பற்றுப்போட்டு வந்தால் வலி குணமாகும்.
கை கால் வலி
பிரண்டை பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் கை கால் வலி முழுமையாக குணமாகிவிடும்.
மலச்சிக்கல்
பெருஞ்சீரகத்தை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்கவைத்து பருகி வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.பெருஞ்சீரகத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இது மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனையை போக்கும் மருந்தாக திகழ்கிறது.