வேலை வாய்ப்பு அலுவலகத்தில் TNPSC சிறப்பு வகுப்புகள்!!சேலம் மாணவர்கள் மகிழ்ச்சி!!

Photo of author

By Gayathri

சேலத்தில் குரூப் 4 தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சேலத்தில் உள்ள வேலை வாய்ப்பு மையத்தில் இலவச சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள் கூறியதாவது :-

TNPSC ( தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ) மூலம் நடத்தப்படக்கூடிய குரூப் 4 தேர்விற்கான காலி பணியிடங்கள் அறிவிக்க இருப்பதை ஒட்டி தற்பொழுது சேலத்தில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக வகுப்புகள் எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரிந்தாதேவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்த வகுப்புகள் ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் அலுவலகத்தில் நாளை ( டிசம்பர் 8 ) புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்ற வருடம் இந்த அலுவலகத்திலிருந்து சிறப்பாக எடுக்கப்பட்டதில் 322 பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஐ எடுத்துக்கொண்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிப்படுத்துதல் அலுவலகத்தை நேரடியாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு :-

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.