இந்திய அணி தற்போது சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணி வென்றது. 3 போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரை கைபற்றியது.
இந்நிலையில் சிட்னியில் 5 வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இரண்டாவதாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் கவாஜா மற்றும் கொன்ஸ்டாஸ் பந்தினை எதிர்கொண்டனர். முதல் நாள் கடைசி ஓவர் வீச பும்ரா வந்தார்.
இந்த பந்தினை ஸ்டிரைக்கில் இருந்து கொண்டு கவாஜா எதிர்கொண்டார் ஆனால் நேரம் கடத்த முயன்றார். இதை அறிந்த பும்ரா தனது கோபத்தை வெளிப்படுத்தினார். நான் ஸ்டிரைக்கில் இருந்த கொன்ஸ்டாஸ் பும்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அடுத்த பந்தில் கவாஜா வை விக்கெட் எடுத்தார். இந்திய வீரர்கள் அனைவரும் ஸ்லெட்ஜிங் செய்தனர். இது நடந்த பின் பல வீரர்களும் கொன்ஸ்டாஸ் க்கு வார்னிங் கொடுத்தனர் . குறிப்பாக ரிக்கி பாண்டிங் சீண்ட கூடாத ஒரு வீரர் யார் என்றால் அது பும்ரா தான் என்று கூறினார். இந்நிலையில் அவர் தற்போது நான் அவ்வாறு அவரை சீண்டியது என் தவறுதான் என்று கூறியுள்ளார். அதனால் கவாஜா ஆட்டமிழந்தார் என்றும் கூறியுள்ளார்.