யு ஜி சி வெளியிட்டுள்ள மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் யுஜிசி திட்டங்களில் இருந்து நீக்கப்படும். மேலும், பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்யப்படும். இதன் மூலம் அந்த பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் பட்டங்கள் செல்லுபடியாகாது. மேலும் அந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆன்லைன் மூலம் நடக்கும் திட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கெடுபிடி வைத்துள்ளது யுஜிசி.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் யுஜிசி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதன் காரணமாக, அரசுக்கு சுமார் 2500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே,இந்தத் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு இந்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்பொழுது மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த 21 பக்க வரைவு அறிக்கையை யுஜிசி தயாரித்து வெளியிட்டுள்ளது. யுஜிசி புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் படி இத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. இதனை ஒன்றிய அரசு அனுமதி அளித்ததுடன், வரக்கூடிய கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும். இந்த விதிமுறைகளை கண்டிப்பாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கடைபிடித்து ஆக வேண்டும் என யு ஜி சி உத்தரவிட்டுள்ளது.