இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது. ஆனால் இந்திய அணி இந்த தொடரில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற விகிதத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் ரோஹித் மற்றும் விராட் , தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதான விமர்சனங்கள் கடுமையாகின. இந்நிலையில் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ஆஸ்திரேலிய அணியை நாம் இரண்டு முறை தோற்கடித்துள்ளோம் அதனால் அவர்களிடம் தோல்வியடைந்தது அவ்வளவு வேதனையாக இல்லை.
ஆனால் வேதனை எதுவென்றால் சொந்த மண்ணில் நியூசிலாந்து உடன் ஒயிட் வாஷ் தோல்வியடைந்தது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுதான் மிகவும் வலியாக உள்ளது.மேலும் இந்த தொடரில் மூத்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை தான் ஆனால் அவர்கள் செய்த சாதனையை மறந்து விடுகிறோம். அவர்கள் இந்திய அணியின் நன்மைக்காக தான் போராடுகிறார்கள். நான் இப்போது அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனினும் இந்திய அணி என் குடும்பம் என உருக்கமாக கூறியுள்ளார்.