தமிழக அரசு தொடர்ச்சியாக மாணவர் கல்வியின் நலனில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மாற்றத்திறனாளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகிறது. இதன் முக்கிய அம்சங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.ஜி.தாமஸ் உதவித்தொகை பற்றி விளக்கியுள்ளார்.
இந்தத் திட்டம் மாற்றுத்திறனாளிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு புதிய திட்டத்தை இணைத்துள்ளது தமிழக அரசு… இதன்படி, ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.2000 ம், ஆறு முதல் எட்டு வகுப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 6000ம், ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ. 8000ம், பட்டப்படிப்பு படிப்போருக்கு ரூ. 12000 ம், மேற்படிப்பு படிப்போருக்கு ரூ. 14 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் ஆராய்ச்சி உதவி தொகை என்ற திட்டத்தின் கீழ், பி.ஹெச்.டி படிக்கும் மாற்றத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் அறிவித்துள்ளது. ஒரு நபருக்கு ஒரு லட்சம் வீதம் 50 மாணவர்களுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, ஆராய்ச்சி(Phd) படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ஒரு லட்சம் வீதம் 50 மாற்றத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.