ஆன்லைன் லோன் செயலிகள் தற்போது அதிகரித்து வருகின்றன, அவை வசதி மற்றும் விரைவான கடன் பெறும் வாய்ப்பை அளிக்கின்றன. ஆனால், இவை பல்வேறு ஆபத்துகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மூலம் பெறப்பட்ட கடன்களுக்கு அதிக வட்டி, தவறான தகவல்களைப் பகிர்ந்து விடுதல், மிரட்டல்கள் மற்றும் பணம் திரட்டும் மோசடிகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதனாலேயே, மக்கள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி, சிலர் தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் செயலிகள் பெரும்பாலும் ஏராளமான ஆவணங்களை, செல்போன் தகவல்களை கேட்டு, அவற்றை மோசடிக்காரர்களுக்கு பகிர்ந்துவிடுகின்றன. எனவே, இந்த செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நிதி ஆலோசகர்கள், பின் வங்கிகளில் அனுமதிக்கப்பட்ட கடன் நிறுவனங்களின் மூலம் கடன் வாங்குவது நல்லது என்று பரிந்துரைக்கின்றனர். இவை சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் பாதுகாப்புகளை உறுதி செய்கின்றன.
முன் எச்சரிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.தவிர்க்க முடியாமல் வாங்கினால் இதுபோன்று சைபர் குற்றவாளிகள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசில் புகார் அளிக்க வேண்டும் சைபர் குற்றவாளிகள் வீசும் வளையில் விழுந்து பணத்தை இழக்க வேண்டாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்து உள்ளது.