வங்கி கணக்குகளில் ஏற்படும் பண மோசடிகளுக்கு வங்கிகளே பொறுப்பு!! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

Photo of author

By Gayathri

வாடிக்கையாளர் ஒருவர் தன் ஆர்டர் செய்த பொருளினை ரிட்டன் செய்ய முயன்ற பொழுது கஸ்டமர் கேர் போல் அவருடைய செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதனை உண்மை என நம்பிய அந்த வாடிக்கையாளர் அவர்கள் கூறியது படி மொபைல் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். அதன் மூலம் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 94,000 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது.

இது குறித்து அந்த வாடிக்கையாளர் எஸ் பி ஐ வங்கிய இடம் சென்று புகார் அளித்த பொழுது, இதற்கு எங்கள் வங்கி பொறுப்பாகாது என்று மறுக்கவே. அவர் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அங்கு ஆர் பி ஐ யின் விதிகளை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு சாதகமாக தீர்ப்பளித்தவுடன், எஸ்பிஐ வங்கி நிறுவனமானது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

எனினும், உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய விதிகள் சரியானது என்று கூறி மூன்றாம் தரப்பு மீறல்களில் இருந்து எழும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு ஆக முடியாது என்றும் இதற்கான முழு பொறுப்பினை வங்கி தான் மீட்டு தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதாவது :-

இதுபோன்று வங்கிகளில் மோசடிகள் நடைபெற்றால் , நடைபெற்ற உடன் கொடுக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும், நடிகை ஆளர்களும் மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் மோசடி குறித்த விவரங்களை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமல்லாது, வாடிக்கையாளர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் யாரென தெரியாதவர்கள் ஓடிபி கேட்கும் பொழுது அதனை பகிரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.