கோவில்களில் தற்பொழுது வழக்கமாக உள்ள முறை தான் விஐபி தரிசனம். இந்த விஐபி தரிசனம் என்பது கடவுளுக்கு எதிரானது என்று கூறுகிறார் குடியரசு துணை ஜனாதிபதி ஜகதீப் தன் கார் அவர்கள். மேலும் அவர் இதுபோன்ற விஐபி தரிசனங்களை கோவில்களில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
” ஸ்ரீ சாநித்யா ” என்று அழைக்கப்படும் நாட்டின் மிகப்பெரிய வரிசை வளாகத்தை கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் குடியரசு துணை ஜனாதிபதி அவர்கள் துவங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது :-
கோவில்களில் ஒருவருக்கு விஐபி அல்லது விவிஐபி என்ற முத்திரை குத்தி முன்னிலை அளிப்பது என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், சமத்துவத்தினுடைய பார்வையில் விஐபி என்னும் வார்த்தைக்கு இடம் இல்லை என்று கூறியவர், கோவில்களில் இருக்கக்கூடிய சிறப்பு தரிசனங்களான விஐபி தரிசனங்களை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பு :-
சமீபத்தில் ஆந்திர பிரதேசத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானோர் விஐபி தரிசனங்களை புக்கிங் செய்து அதன் மூலம் திருமலை பெருமானை தரிசித்து செல்கின்றனர் என்றும் முடிந்தவரை இந்த விஐபி தரிசனங்களை குறைக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.